குறளும் என் கதையும் (சிறு சேமிப்பு )

\"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி  அவையத்து முந்தி இருப்பச் செயல் \" (குறள்-67)



என் கதை .......


அது ஒரு குக்கிராமம் நாளாந்த கூலி செய்யும் \"நாராயணன் \" ஆறு பிள்ளைகள் ஒரு வேலை சாப்பிட்டு மறுவேலை விரதம் இருந்து வாழ்க்கையை
ஓட்டும் மிக வறிய குடும்பம் .
    ஆனாலும் நாராயணனுக்கு ஒரு நல்ல பழக்கம் ஒன்று இருந்தது திருமணத்திலிருந்து நாள்தோறும் சிறு தொகையை நிலத்துக்கு அடியில் ஒரு இரும்பு
உண்டியலில் சேமிப்பது ...!

     அடை மழை வேலைக்கோ போகமுடியாத கடும் கஷ்ரம் சாப்பாடு இல்லாமல் கடைசி குழ்ந்தை அழுகிறது
 இவரது மூத்தமகன்\" கரிகாலன்\" படிப்பில் மிக மிக கெட்டிக்காரன் ஆனால் வறுமை படிப்புக்கு பெரும் தடையாக இருந்தது ..ஆனால் நாராயணன் விடுவதுல்லை அவனை இயன்ற அளவுக்கு பாடசாலைக்கு அனுப்பியே தீருவார் .
    நாட்கள் விரைந்து ஓடின கிரிகாலன் மாவட்ட ரீதியில் \"முதல் மாணவனாக கணித துறையில் \"
சித்தியடைந்தான் .
 நண்பர்கள் எல்லோரும் மிகப்பெரிய பாராட்டுடன்
வீட்டுக்கு அழைத்து வந்து விடை பெற்றனர்
 கிரிகாலன் கதவை பூட்டி விட்டு அழுதுகொண்டு இருந்தான் ..தொடர்ந்து படிப்பதற்கு பணம் இல்லாதாதால் ..
    கதவை தட்டும் சத்தம் கேட்ட போது கண்ணீரை துடைத்து விட்டு கதவை திறந்தான்
  முன் அப்பா நின்றார் \"ஒரு கட்டு காசு \" இதைக்கொண்டு படிப்பை தொடரு மகனே என்றார் .
ஆம் சிறுவயதில் இவனுக்காக சேமித்த பணம் தான் அது ..
 \"சிறுதுளி பெரு வெள்ளம் \"
தந்தையின் கடமையை நாராயணன் செய்து விட்டார்
 

காலத்துக்கு காலம்

பிறக்கும் போது அழுதேன் புரியாத காலம்
இறக்கும் போது அழுவார்கள் தெரியாதகாலம்
படிக்கும் போது அழுதேன் முடியாத காலம்
காதலின் போது அழுகிறேன் கஷ்ட காலம்
***************************************************************
இத்தனைக்கும் ஆசைப்படு ..!

அதிகாலையில் துயில் எழுவதற்கு ஆசைப்படு.....!
கட்டணம் இன்றி காலை கடனை கழிக்க‌ ஆசைப்படு ...!
துயில் எழுந்தபின் குளிக்க‌ ஆசைப்படு.........!
குழித்தபின் காபி குடிக்க‌ ஆசைப்படு....!

அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...!
உடுத்த‌ உடையை ஊத்தையாக்காமல் ஆசைப்படு...!
நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....!
நேரம் தவராமல் வேலை செய்ய‌ ஆசைப்படு .....!

மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....!
மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...!
மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...!
பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!

*****************************

அத்தனைக்கும் மன்னித்து விடு ...!

இடைக்கிடையே அண்ணனின் அடி உதை..
தொடர்ச்சியான அப்பாவின் திட்டல் ...
கேலியாக இதயத்தை கீரும் அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல் தம்பியின் வசப்பு ...

இரவெல்லாம் அழுது  அழுது கண்வீக்கம்
சாப்பிடும்போது அம்மாவின் அன்பு
கலந்த சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...

என்னை
கண்டவுடன்  பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!-அன்பே
அத்தனைக்கும் என்னை மன்னித்து விடு ...




This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola