நீ என்ன தவறு செய்தாலும் ..
முதலில் யாருக்கும் சொல்லாமல் ஒழிப்பார்

 நீ எவளவுதான் கெட்டவனாக யார் சொன்னாலும்
உடனே நம்பாமல் சொன்னவரை திட்டுபவர்

 வீட்டில்  உன்னை யாரும் வெளியேற்றினால்
ஒழித்து ஒழித்து உணவு தருபவர்

உனக்காக நோயாக இருந்தவர் -என்றாலும்
உன்னை வெறுக்காதவர்

ஆறு பேர் நிற்கும் போது ஐந்து ரொட்டி இருந்தால்
தனக்கு பசிக்க வில்லை என ஒதுங்குபவர்

இத்தனைக்கு பிறகு இவர் யார் ?என்று நான் சொன்னால் .......

தாய் குலத்துக்கு அழகில்லை
ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் \"பசு \" ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!

பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!

 இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் ..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்

பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது
  விவசாயிகள் மண்னை அதன் மீது  போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
\"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் \" என்று பலவிடையத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்

என் தோழன் மரம் தானடா
...
என்னைப்போல் எந்த நேரமும்
 நிமிர்ந்து நிற்பவன்

எனக்கு பிராண வாயுவை தந்து வாழவைத்துக்கொண்டிரிப்பவன்..

எனக்காக தினம்
தோறும் உணவு தருபவன்

தன்னையே அழித்து
விறகாக பெயர் எடுத்தவன்

பச்சை நிறத்தை
பார்த்தால் கண்ணுக்கு
சிறப்பு என்பதற்காக
வைத்தியனாக இருப்பவன்
 
என் வீட்டு முத்தத்தை
 அழகுபடுத்துபவன்

இரவும் பகலும் தொங்காமல்
 உழைப்பது
இரண்டுதான்
ஒன்று என் இதயம்
மற்றையது என் மரம்

எப்படி நீங்கள் விட்டீர்கள்
 நண்பனாகாம்ல்
விரைந்து நண்பனாவோம்
மரம் என்ற நண்பர்களை  பெருக்குவோம்
                                         ( என்  தோழமை கவிதை )

வருத்தினாலே வெற்றி உண்டு ..!
மாணவன் தன்னை வருத்தினாலே
 -சிறந்த பெறுபேறு

விளையாட்டு வீரன்  தன்னை வருத்தினாலே-வெற்றிக்கிண்ணம்

முயற்சியாளன்  தன்னை வருத்தினாலே-கோடீஸ்வரன்

இறைவனை காண வேண்டுமாயின் ஞானி
தன்னை வருத்த வேண்டும்

உலகில்  வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி  பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..?

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola