காற்றோடு போராடுவது -பஞ்சின் வாழ்க்கை

நினைவோடு போராடுவது-காதலின் வாழ்க்கை

பசியோடு போராடுவது-ஏழையின் வாழ்க்கை

பூனையுடன் போராடுவது-எலியின் வாழ்க்கை

கடனோடு போராடுவது-விவசாயியின் வாழ்க்கை

சூரியனோடு போராடுவது-பூவின் வாழ்க்கை

தமிழோடு போராடுவது- கவிதையின் வாழ்க்கை
**************************************************************************************
எண்ணத்தை விட ஒரு
கருவி இல்லை

உன்னை நான் காதலியாக மட்டும் நினைக்கவில்லை
நான் வழிபடும் பெண் தெய்வமாகாவும் கருதுகிறேன்
சில வேலை நீ கூட இதை சிரிப்பாக எடுக்கலாம்
 .
           நீ இருந்துபார் நீயே உனக்கு கடவுளாக தெரிவாய் -உன்னை தேவதை ஆக்கியது என் \"நினைவு அலை\" தான் -இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை

  கிணறு


ஊற்றெடுக்கும் கிணறு கவலைப்படுவதில்லை \" என்னிலிருந்து தண்ணீரை எடுக்குரார்களே என்று ..

*****************************************

கண்ணீர் குளம் 

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
கண்ணீரை கண்டிராது என் கண்கள் ......!

*****************************************

உறுதியாக கூறுவேன் 


உன் நான்  எந்தளவு நேசிக்கிறேன் என்று
எனக்கு சொல்ல தெரியாது. ஆனால்
உன் நான் நேசிக்கும் அளவுக்கு
உலகில் வேறு யாரும் உன்னை நேசிக்கபோவதில்லை -என்பது
உறுதியாக கூறுவேன்
****************************************

கள்வனே .......!
காதலித்து கைவிடப்பட்டவர்களில்
நாம் ஒருத்தி ...!

உனது அதிஸ்டம் எனக்கு ஒரு
தம்பியில்லாததுதான் -அவன்

மட்டும் இருந்திருந்தால் -உன்னை
அடித்திருக்க மாட்டான் ..-காரணம்

நாங்கள் அந்த குடும்பம் இல்லை
உன்னை ஒரு கேள்விஎன்டாலும்
கேட்டிருப்பான் .-போகட்டும் விட்டுவிடு

யாரையும் நீ இனி காதாலிப்பதாக இருந்தால்
தம்பி இல்லாதவன் வீட்டை பெண்ணை பார்
என் தம்பிபோல் அவன் நிச்சயம் இருக்க மாட்டான்
என் விழிகள்
உன்னிடம் பலநூறு
கவிதைகள் பேசுகின்றது,
உனக்காக புதிதாக
ஒரு அகராதி தேடுகிறேன்
என் விழியின் மொழிகளை
நீ மொழிபெயக்க,
அப்போதாவது என்னை
புரிந்துகொள்வாயோ,
*****************************************
மூச்சு  காற்று  குற்றுகிறதா ...?

என்னவளே ....
என் இதயத்தில் இருப்பவளே ...!

 மூச்சு விடக்கூட பயப்பிடுகிறேன்
டிக் டிக் என்ற என் இதய துடிப்பு

உன்னை முள்ளுபோல் குற்றி விடுமோ என்று

வலித்தால் சொல் கண்ணே மூச்சை விடவில்லை
மரணத்தையே அடைகிறேன் ...
****************************************

கடிகாரத்தில் நகர்ந்து கொண்டே
இருக்கிறது முட்கள்

ஒவ்வொரு வினாடியும் நீ தரும் நினைவு
காலத்தால் அழியாது

இதயத்தில் நகராமல் நிலைக்கின்றது
நீ பேசிய சொற்கள்..!

அழகான நொடிகள்!
அழகான நிமிடங்கள்!

அதை விட அழகான நீ!
இன்னும் அதை விட

வேறன்ன அழகாக இருக்கிறது
நம் காதலும், நினைவுகளும் தான்!

இதைதான் நான் காதல் \"அல்பம் \"
என்கிறேன்நம்பிக்கை துரோகம்

 ஒரு இதயம் அழுது கொண்டிருக்க மறு இதயம்
சிரித்துக்கொண்டோ இருப்பது 

*****************************************************************

காதல் தோல்வி

இரண்டு இதயங்கள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டு   இருப்பது 

*************************************************************************************

காதல் வெற்றி


இரண்டு இதயங்கள் கீதம் பாடுதல்

******************

கள்ள காதல் 

இரண்டு இதயங்கள் வேறொரு இதயத்துக்கு பயப்பிடுதல் ...!

***********

ஒரு தலை காதல்

ஒரு இதயம் தன்னுள் இரண்டு இதயம் இருப்பதாக‌ நினைப்பது ...!

*********************

நேரில் வராதே ..!


நீ நினைவாய் வந்தாய் ..!
என் அறை முழுவதும் கசக்கி எறிந்த
கவிதை தாள்கள்

நீ என்
கனவில் வந்தாய்
விடிய
எழும்பிப்பார்த்தேன்
என் கட்டில்
தலையணை நனைந்திருந்தது

நீ நேரில் நின்றாய்
சில நிமிடம் மூச்சே நின்று விட்டது
தயவு செய்து அடிக்கடி நேரில் வராதே ..!

நீ பேசும் வார்த்தை
எல்லொருக்கும் புரியும்! ஆனால்
 நீ பேசாத மௌனம் உன்னை
காதலிக்கும் இதயத்துக்குத்தான்  விளங்கும்
****************************************
 
கை விரல்களுக்கடியில்
கதறுகிறது என்
காதல்.மோதிரம் .....!!!!

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola