மறக்க முடியாத வலி…

தூறலும் இல்லை மழை சாரலும் இல்லை
ஆனால் நான் மட்டும் நனைந்து போகிறேன் ….
உன் அன்பின் சாரலில்
——————————————-
உன் உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது
——————————————-
பிரிவு என்பது யாராலும்
மறக்க முடியாத வலி…
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு…
——————————————-
அலைகள் எனது ஆசான்கள்*
விழுந்து எழுவதால் அல்ல
ஒவ்வொரு முறை விழும் போதும்
தவறாமல் எழுவதால்
——————————————-
ஒ (o ) குரூப் கண்ணீர் தேவை


உன்னிடம் தொலைந்த நான் ..
உடல் தேய்ந்திருக்கிறேன்..
உளம் சோர்ந்து இருக்கிறேன்
உணவை உட்கொள்ள முடியவில்லை ..
உறக்கம் கொள்ள முடியவில்லை ..

ஓடினேன் டாக்டரிடம் ...
சொன்னாரே ஒரு பதில் ;;
உடம்பில் இரத்தமில்லை  உனாக்கு 
உண்மைதான் என் அன்பே ..

உன்னை நினைத்து உன்னை நினைத்து
அழுது அழுது இரத்தமெல்லாம் \"கண்ணீராகிவிட்டது \"
ஒ (o ) குரூப் கண்ணீர் தேவை தொடர்ந்து அவளை நினைத்து சுகமாக அழுவதற்கு ..
இரத்தம் தேவையில்லை ..

உனக்காக மட்டும் காத்திருப்பேன்


உலகில் வாழ ஆசை தான்
உன்னோடு மட்டும்,
உதறி விட்டு சென்று விடாதே,
உனக்காக மட்டும் காத்திருப்பேன்
உயிர் உள்ள வரை....
****************************************
இருதய மாற்று சிகிசை

நீ என்ன இருதய மாற்று சிகிசையா செய்து
விட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி எத்தனையோ நினைவுகளை
தந்துவிட்டு ..
எதுவுமே இல்லததுபோல் ..தலையை குனிந்துகொண்டோ செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் ?
*****************************************
அருகில் இருந்தே சண்டை இடு ..!

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு
அன்பு காட்டுகிறாய் .................?

 உன்னோடு இருந்தபோது இவ்வளவு
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது

பிரிந்து இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில் இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
*****************************************

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
ஆயிரம் முறை கண்ணாடியை பார்த்தேன்,

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
பல உடைகளை உடுத்துப்பறேன்

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
பல முறை தலை சீவுகிறேன்

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
பல திசைகள் உருண்டு படுக்கிறேன்

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
பல முறை புன் சிரிப்பு சிரித்து பார்க்கிறேன் ...

நீ  என்னை ஒரு முறை பார்த்ததற்காக....
பல முறை கண்ணாடியில் பேசிப்பார்க்கிறேன்

***************************************

intha veb 20.01.2013 aarampam
mahaaraji key 6 perrathu 20.01.2013 thhan

 கோடீஸ்வரன் நீ ..?


இளைஞனை கேட்டேன் ..?
உன்னிடம் உள்ள சொத்துக்கள் எவ்வளவு ?
சும்மா போனங்க சார் ..சொத்தா ?
நானோ ஒரு கூலி
கூலி வீட்டில் இருக்கிறேன்
தினமும் கூலிக்கு போனால் தான் சோறு .
என்னட்டை போய் சொத்து கேட்கிரியலே என்றான் .
உனட்ட சொத்து ஒன்றும் இலையா ?
இல்ல சார் .......................................................!

உன் கண் இரண்டு பெறுமதி என்ன ?
\"பல இலட்சம் போகும் சார் \"
உன் கிட்னியின் விலை என்ன ..?
\"பல இலட்சம் போகும் சார் \"
இப்ப சொல் நீ யார் ..?
\"கோடீஸ்வரன் சார் \"

இளைஞர்களே \"சிறுவயதில் மது. மாது. புகை .வஸ்து என்பவற்றை பாவித்து ஏன் பிச்சைக்காரர் (நோயாளி ) ஆகிறீர்கள் ?..சிந்தியுங்கள் உலகம் உங்கள் கையில் ...

******************************************

 கடவுள் இல்லை என்றேன்
என் நண்பனை காணாத வரை

வாழ்க்கையே இல்லை என்றேன்,
என் நண்பனை காணாத வரை

உலகமே   பொய் என்று நினைத்தேன்
என் நண்பனை காணாத வரை

காதல் தான் பெரிது என நினைத்தேன்  
என் நண்பனை காணாத வரை

கானா கவிதை


என்னவள் சிரித்தாள் ..
சீனி\" டப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி ..!
என்னவள் கதைத்தால் ..
தகர \"டப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி ...!

என்னவளே நீ ஓடி வந்தால் ..
தண்ணீர் \"பீப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்குமடி .

என்னதான் என்னவள் \"\'டப்பாவோ\"\' பீபபாவோ\"\"
என்\" இதய டப்பாவுக்குள் \" குடிகொள்ளுகிறாள்..
***************************************


பார்க்க முடியாத தொலைவில் செல்லுகிறேனே..

பேச முடியாத தூரத்தில் இருக்கப்போகிறேனே

என்றெல்லாம் கவலைப்படாதே

உன்னிடம் இருக்கும்
எண்ணங்கள் தான் -தொலை பேசி

நீ உண்ணும் உணவைதான்
நான் இங்கு பகிர்ந்து உண்ணுகிறேன்

நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றைத்தான்
நானும் சுவாசிக்கிறேன் இப்பவும்.


This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola