என்னவளே! பிரியமானவளே! நேசத்திற்குரியவளே!

என்னை எனக்கே உணரவைத்த அன்புக்குரியவளே!
என்னை நான் நேசிக்க நீதான் காரணமடி.
எனக்காகத்தான் பிரம்மன் உனை படைத்தானோ
என் உயிரும் உன் உயிரும் ஒன்றென உணர்ந்தேனே.

பிரிவென்பது நமக்கில்லை துன்பமென்பதும் நமக்கில்லை
அன்பின் புனிதம்தன்னை உன் மூலம் உணர்ந்தேனே
கனவிலும் கவிதை எழுத காரணம் நீ தானே
கடவுள் வாழ்கின்றார் என, உன் அன்பில் உணர்ந்தேனே.

வாழ்கையின் அர்த்தத்தை உன் காதலில் அறிந்தேனே
வாழ்வின் சொர்க்கத்தை உணரவைத்த தேவதையே
வாழ்வின் உயிரோடு கலந்த என் உறவே - விலைமதிப்பற்ற
வாழ்க்கைப் பயணத்தில் என்னோடு என்றும் நீ...

அன்பு வார்த்தையில்லை உயிரிலும் மேலான உணர்வு நீதானே
அமுதும் தேனும் எதற்கு நீ என் வாழ்வில் ஒளி வீசும் போது
அன்பே கடவுள் என உணரவைத்த என் வாழ்வில் செல்வமே
அகிலமும் போற்றும் அன்பு எம் காதலில் மேன்மை பெறும்
**************************************************************************************
தவறு என்று தெரிந்தும்

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசை
காதல்
——————————————-
பூக்கள் மலர்வது
உதிரதான் என்றால்
மொட்டாகவே இருக்கட்டும்
நமது நட்பு.
——————————————-
என் காதலியின் கொலுசு
சத்தம் கேட்டுப் பிறந்த கவிதைகள்
அவளூடைய மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன !!!
——————————————-
உன் மெளனத்தில் உள்ள
வார்த்தைகளையும்…
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்…
யார் உணர முடிகிறதோ
அவர்கள்தான்
உனக்காக படைக்கப்பட்ட
உன்மையான
உறவுகள்…
***********************************************
skype எனும் இணையம்.

நீயும் நானும் எதிர் எதிரே
உன்னை கட்டி அணைக்க
ஏங்குகிறது என் கைகள்
ஆனால் நம் இடை நடுவே
skype எனும் இணையம்...!!
                                                  (படித்ததில் ....)

நான் விட்டு செல்லும் சுவடு


விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...
இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...
என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..
எனக்கு மரணம் என்பது உயிரைப் பிரிவதல்ல..
உன்னைப் பிரிவது..
கண்ணீர் விட்டு அழுவது பிடிக்காது உனக்கு
அதனால்தான் கவிதை எழுதி அழுகிறேன்..
நான் எழுதும் எழுத்திலெல்லாம் நீ இருக்கிறாய்..
நீ இருக்கும் எழுத்தைத்தான் நான் எழுதுகிறேன்...
காலம் அழித்துவிடக் கூடியதல்ல உன் நினைவுகள்
அதை உலகம் உணர நான் விட்டுச் செல்வதே இந்த சுவடுகள்.. ..
*************************************************************************************

nampuriren santhosam varum enru


இன்று உன்னுடைய இழப்பு
 கவலையாக இருந்தாலும்
அதில் நியாயங்கள்  இல்லாமல் இல்லை .

உனக்காக நான் பட்ட துன்பங்களும்
உனக்காக பட்ட அவமானங்களும் -நீயே அறிவாய்
காதலால் பித்துப்பிடித்து அலையும்
என் போன்ற மூடர்களுக்கு -நான் ஒரு ஆசிரியன்

இன்று உன் தவறுகளை மறந்து நான் மன்னித்தாலும்
உன்னை ஏற்றுகொள்ள நான் எப்பொழுதும் தயாரில்லை....நீ தந்த வடுக்கள் அதிகம்
என்றாலும் ...........................................................?

நம்ம மனசுக்கு பிடிச்சவங்க
நம்மை கஷ்ட படுத்தும்போது
அவங்க மேல நமக்கு கோபம் வற்றாது
கண்களில் கண்ணீர் தான் வரும்.. !

இதுவரை உன்னை போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை....
காதல் கொள்ளவும் இல்லை...
அதனால் தான் இன்னும் கூட உன்னையே
நினைத்து கொண்டுருக்கிறேன்...!!!

நீரில் மூழ்கி நீந்தவில்லை என் கண்கள்-உன்னால் என் கண்ணீரில் நீந்துகின்றது தினமும்

நீ கொடுக்கும் வலிகளுக்கு என்னை விட்டு செல்ல வழி தெரியாமலா எனக்குள்ளேயே சுற்றி வருகின்றது.-என்றாலும் பொறுத்து இருக்கிறேன்
சில காலத்தின் பின் அது சந்தோசமாக மாறலாம்..?This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola