காதலின் படிமுறை -நீ எந்த நிலை 


                காதல் அரும்பு
               ************************
கூட்டத்தில் நெரிந்து
 கொண்டு கூத்தாடி  போல்நின்றேன் -நீ பார்த்த பார்வையில் உறைந்து போனேன்  -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு உன் மீது ஊமை காதல் .
                காதல் ஏக்கம்
              ************************
மீண்டும் எப்போது சிந்திப்போம் ..மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............!
                காதல் மலர்வு
               **************************
காதல் என்பது இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...!

                காதல் வாழ்க்கை
               ****************************
தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!
                 காதல் வலி
               **********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று
               காதல் ஊடல்
              ***********************
வலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும் \"நேர்கணிய தொடர்பு \"
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை முத்தம் கரையும் எண்டு
               காதல் தோல்வி
               ************************
குறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய் பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும் செய்து தொலை என்றது மூன்றாம் தலை ......!
              காதல் வெற்றி
             ***********************
காதலின் வெற்றி காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில் என் இதயம் இயங்குயது தான் ...!காதல் வெற்றி ...
          காதல் கைமாற்றம்
         ******************************
காதலில் வெற்றிகண்ட காதலர் நாம் 
நம் குழந்தை காதலித்தால் எப்படி ? தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ? வளர்வது ?
நம் குழந்தையும் காதல் திருமணம் தான்
         காதல் மரணம்
        ************************
உள்ளத்தால் வரும்காதல் மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல் சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ? அதுவும் விழுந்தது
            புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
*****************************************
இதய துடிப்பின் நிமிடங்கள்

நிமிடத்துக்கு 72 தடவை துடிக்கும் இதயம்
உன் எதிர்பார்த்து நிற்கையில் 80 தடவை துடிக்கிறது
உன்னை கண்டவுடன் 100யும் தாண்டுகிறது
துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு நீங்கிச்சென்றால்
இதயம் துடிப்பதை
மறந்துவிடும்,,,!
*****************************************
என் சுற்றுலா

பள்ளி காலத்தில் இருந்து ....
பல சுற்றுலா சென்றேனடி ..

அதற்கு பெயர் கல்வி சுற்றுலாவாம்

சுற்றுலா பேரூந்தில் ஏறிய நிமிடத்தில் இருந்து
உன்னை சுற்றிப்பர்ப்பதுதான்  எனக்கு சுற்றுலா
என்பது யாருக்கு விளங்கப்போகிறது ..?

சுற்றுலா முடிந்ததும் அறிக்கை
தா என்றார் -ஆசிரியர்
எப்பவரை  எழுதுவேனோ தெரியவில்லை
எப்படி எழுதுவேன் அறிக்கை
 
என்றாலும் தொடங்கிவிட்டேன் எழுத
மன்னிக்கவும் -வரைய -ஆம்
உன்படத்தை .....

 என் கவிதை

 அன்பே .....!
நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்க்கதமிழ் தெரிந்த  தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் உணர்ந்த நக்கீரனும் இல்லை
உன்னைப்போல்  நானும்ஒரு\"பொறுக்கிதான்\"-ஆனால்
மற்றவர்களின் கவிதையை பொறுக்கும் அளவுக்கு
பொறுக்கியல்ல ......................................!

கவிதை என்பது ஆன்மீக சுகம்
ஆன்மீகம் விளக்கும் பொருளல்ல உணரும் செயல்
உணர்வை ஏற்படுத்த எளிய முறை போதும் .....!
அதற்காகவே உருவாக்கினேன் \"கானா கவிதை \"
வாயில் வருவதை உளருவேன் மன்னித்துக்கொள்!
****************************************


நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்

நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ  நடந்து திரிவதுஎன் இதய வீதியில்

நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்
 
நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்

நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?


சொல்லி விட்டு செய் ...!

இத்தனை நாட்களாய் ..
பழகிய நீ ...

இப்போது என்னை கண்டால்
முகத்தை திருப்புகிறாய்...?

தூரக்கண்டவுடன் திரும்பி செல்லுகிறாய்..?

கிட்ட வந்தவுடன் முறைத்து பார்க்கிறாய்

நண்பிகளுடன் செல்லும் போது  தெரியாதன்வன்
போல் செல்லுகிறாய்

சொல் என்ன செய்ய போகிறாய் ...?

மறக்க போகிறாயா ?
காதலை துண்டிக்க போகிறாயா ...?காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்
இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்.
*****************************************
ஒரு அகராதி தேடுகிறேன்

என் விழிகள்
உன்னிடம் பலநூறு
கவிதைகள் பேசுகின்றது,
உனக்காக புதிதாக
ஒரு அகராதி தேடுகிறேன்
என் விழியின் மொழிகளை
நீ மொழிபெயக்க,
அப்போதாவது என்னை
புரிந்துகொள்வாயோ,
*****************************************
சோகத்திலும் சிரிக்க பழகி விட்டேன்


நீ தந்த சந்தோசங்களை விட
சோகங்கள் தான் அதிகம்
நான் சிரித்த நாட்களை விட
அழுத நாட்களே அதிகம்...

வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
கோழைத்தனமாக சாவதற்கு அல்ல
சோகம் எனக்கொன்றும் புதிதல்ல..
சோகம் மறக்கவே நான்
சிரிக்க பழகிக் கொண்டேன்...

 சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினம் அழிந்துவிடும்
 டார்வினின் பரிணாம கூற்றை படித்ததால்
 சோகத்திலும் சிரிக்க பழகி விட்டேன் ..
 அவளும் மாறுவாள் டார்வினின் பரிணாம  கூற்றை படித்ததால் ...
*****************************************

உன்னை கண்ட நாள்
இழந்தேன் நிம்மதியை
உன்னோடு பேசிய நாள்
தொலைத்தேன் அழகு மொழியை

காத்திருந்து காத்திருந்து
விட்டேன் கல்வியை
என் வாழ்க்கையில்
நான் அனைத்தையும்
இழந்து விட்டேன்!

இழக்கமல் இருப்பது
உன் நினைவும் -என் உயிரும்
உன்னையும் நான்
இழந்து விட்டால்
இறந்தே போவேன்.!
உன்னை ஜெயிக்க

நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!
உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்!
****************************************
"கறுப்புச்சூரியன்"

கண்களுக்கு புலப்படும்

"கறுப்புச்சூரியன்"...

அவள் "கறுவிழிகள்"...
****************************************
மவுனம் தந்த பரிசு...

காதலியை பிரிந்த பிறகு

பிரிவின் நினைவாக

மவுனம் தந்த பரிசு...

கண்ணீர்த்துளிகள்!
****************************************
அனாதை குழந்தைகளை.


குழந்தை வரம் வேண்டி
 பல கோயில்களுக்கு செல்லும்
 "நிறைய" பெண்களுக்கு தெரிவதில்லை
 அம்மா வரம் வேண்டி நிற்கும்
 அனாதை குழந்தைகளை.


காதல் !!

பகலை வெறுமையாக்கி
இரவை கண்ணீருடன் கழிக்கவைக்கும்
உணர்வுக்கு பெயர் தான் காதல் !!
****************************************
  உன் கண்களில் ..

இன்று என்னை
   பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
    என்றாவது நீ
 என்னை நினைக்கும்போது....
    உன் கண்களில்
இருப்பேன் கண்ணீராக
****************************************
கண்மணியே...

இதயம் என்பது இறக்க நேர்ந்தாலும்
அதில் இறவா வரம்பெற்றது
உன் நினைவுகள் மட்டும்தான்
கண்மணியே...
*****************************************
அர்த்தம் அற்றது !!

தேவையான நேரத்தில்
 காட்டப்படாத அன்பு
பின்பு ஆயிரம் ஆண்டுகள்
 தொடர்ந்து வந்தாலும்
 அர்த்தம் அற்றது !!
*****************************************
காதல் வாழ்க்கிறது!!!

காதல்
சிலருக்கு பொழுதுபோக்கு
, சிலருக்கு விளையாட்டு ,
 சிலருக்கு பந்தா
,சிலருக்கு தகுதி,
ஆனா சிலருக்கு
 வாழ்க்கையாய் இருப்பதால்
மட்டுமே காதல் வாழ்க்கிறது!!!
**************************************** உயிராய் நினைப்பாய்


நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும்  அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?

\"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்\"

தனிமையில் இருக்க
பயம் ஓன்று இல்லை
எனக்கு
உன் நினைவுகள்
இரு(ற)க்கும் வரை
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
பதித்த முத்தத்தின் கதகதபையும்
எண்ணி கொண்டே
இரு(ற)க்கிறேன்
வந்து போகின்ற நினைவலைகளில்
அன்றொரு நாள்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,
அலைகள் அடித்து விட்டு
போகின்ற பாதையில்
நாம் நனைத்த பாதங்களையும்
நடந்த காலடி சுவடுகளையும்
தேடி கொண்டு இருக்கிறேன்
நம் காதலை போல.
****************************************
நீ என்னை தினம் தோறும் சந்திக்க வேண்டும்
உன்னோடு கொஞ்சி குலாவுவதற்கு அல்ல ..
உன்னை நான் வணங்குவதற்கு ;;;
     நான் வணங்கும் இன்றைய தெய்வம் நீ தான்
நீ வேறு வேறு உடையுடன் வரும் போது கடவுளின் அவதாரம் உண்மையோ என்று தோன்றுகிறது
****************************************
*நீ கண்ணாடி முன் அடிக்கடி நிற்பாய் ...!
அறை பூட்டிவிட்டு  தனியே கதைப்பாய் ..!
பொருத்தமில்லாத பொருளை பார்த்து சிரிப்பாய் ..!
பிறருக்கு பொருத்தமில்லாத விடை கொடுப்பாய் ..!

 aஜன்னலோரம் அமாவாசை இரவில் நின்று தேடுவாய் ..!
   ஏன் ? சிரிக்கிறாய் ஏன் ? அழுகிறாய் என்று தெரியாமல் செய்வாய் ..!
வெறும் கோப்பையில் சோறு உண்பாய் ..!

உன் கடைசி தம்பி உன்னை கண்டு சிரிப்பான்...!
உன் நண்பிகளுக்கு கேலிப்பொருலாவாய்..!
அம்மவின்  திட்டு அர்ச்சனையாக கேட்கும் ..!
மன்னித்து விது அன்பே இத்தனைக்கும் நான் தான் காரணம்


எறும்பு ஊர ஊர கற்குழியும்


 என்னை   ஏங்க வைப்பதில் நீ சந்தோசப்பட்டால்
என்னை   முறைத்து பார்ப்பதில் நீ சந்தோசப்பட்டால்
என்னை   திட்டுவதில் நீ சந்தோசப்பட்டால்
என்னை   விலகிப்போவதால் நீ சந்தோசப்பட்டால்
எல்லா       வற்ரையும் செய் ......!
உனக்கு என்ன தான் சந்தோஷமோ???
சரி விடு
காத்து கொண்டு இருக்கிறேன்
நீ வருவாய் என..
எறும்பு ஊர ஊர கற்குழியும் என்று படித்திருக்கிறேன்

****************************************

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola